GODDESS WHO PLAYS WITH YOU

Sri Gurubyo Nama:

Sri Maathre Nama:

Guru Srivasthan Swamy initiates upasakas into Bala mantras after they practice Maha Ganapathy Tharpanam for a considerable period. The mantras are powerful and stoke an innate quest in the upasaka, preparing him for the next stage of Sri Vidhya.

The concept of BALA (VALAI) comes from Tamil siddhar tradition,

It is believed that without the blessing of VALAI, one can never attain wisdom in siddhar tradition.

She is a deity (a girl who had not attained puberty), and has the power to open the internal Chakkras. that initiate the journey in the Siddha Tradition,

She is called by various names, the female deity in any temple who is not married is a VALAI.

and the most famous VALAI is KANYA KUMARI.

But as the question presumes she is not the popular god of worship in T N or else where, as VALAI very few people know her, and the purpose of worshiping her, people treat her as any other AMMAN deity, and pray to her. Her popularity will pale in comparison to MURUGA, BALAJI or Iyyappan.

As for the second part of the question, The SIDDHAR tradition is Tamil tradition, hence she is popular with people who have been initiated in that path.

This is a beautiful song in praise of VALAI:

listen if you are interested:

Sri Bala Tripura Sundari is the child form of Maha Tripura Sundari, The Great Goddess. Upadesam of Sri Bala mantra happens after initiation into Maha Ganapathy Tarpanam and is the basic step in Sri Vidhya tantra.

Why Sri Bala?

The upasaka is now a child in the school of Sri Vidhya. To master the profound knowledge of Sri Vidhya and receive the intense energy of Maha Tripura Sundari, he needs to take baby steps. Upsana of Sri Bala mantram is like taking kindergarten classes. While Ganapathy opens the gates to the school, it is Bala who actually starts the teaching in the kindergarten. Like the child-goddess, the upasaka gains the quality to learn more and does it in a playful, child-like manner.

Siddhars of South India call Sri Bala Vaalai Devi. The mantras bestow a plethora of benefits to the upasaka, from granting him immense beauty and youthful appearance to removing major roadblocks in life.

There are three Bala mantras the upasaka is trained in—Triputa (which is basic and kindles an interest in learning), Kumari (which makes him want to learn more) and the final one (which gives him the maturity of an adult). Bala mantras give the upasaka the maturity and vairagya to proceed further in the hard path of Sri Vidhya.

Sri Bala is said to have the appearance of the rising Sun, bright red and flamboyant and always smiling, with a book and a japa mala—indicative of her ability to cultivate the seed of learning in the upasaka. With Bala mantra upadesyam, the upasaka experiences the child-like goddess in him, one who makes mistakes and learns the hard way. He gains a lot of good qualities as she tests him and prepares him to rise up to the next stage of Sri Vidhya.

Sri Gurubyo Nama:

ஸ்ரீ வாலையம்மன் போற்றி

ஓம் அறிவாகிய அக்னி குண்டத்தில் தோன்றிய அன்னையே போற்றி ஓம்
ஓம் ஆசை வடிவான பாசக் கயிற்றை ஏந்திய அன்னையே போற்றி ஓம்
ஓம் தீமையை பொசுக்கும் கோப வடிவான அங்குசத்தை கையில் ஏந்தி ஒளிரும் அன்னையே போற்றி ஓம்
ஓம் மனமாகிய கரும்பு வில்லை உடைய அன்னையே போற்றி ஓம்
ஓம் ஐந்து புலன்களாலும் உணரப்படும் அன்னையே போற்றி ஓம்
ஓம் ஒலி, தொடுகை, உருவம், ரசம், மணம் என்ற ஐந்து தன்மாத்திரைகளையும் ஐந்து மலர் கணைளாக கொண்ட அன்னையே போற்றி ஓம்
ஓம் பாசக் கயிற்றால் பிணைப்பவரும் பின் தனது அங்குசத்தால் வெட்டி எறிபவருமான அன்னையே போற்றி ஓம்
ஓம் தீர்க்கமான நீண்ட கண்களையுடைய அன்னையே போற்றி ஓம்
ஓம் தன் சிவப்பொளி வெள்ளத்தில் அண்டங்கள் அனைத்தையும் மூழ்க செய்யும் அன்னையே போற்றி ஓம்
ஓம் தன் கால் நகவொளியில் வணங்குவோர் அகத்துறைந்த இருளை போக்கும் அன்னையே போற்றி ஓம்
ஓம் தாயே உன் பாதகமல தூசியே, வேத மங்கையின் வகிட்டு குங்குமம் போற்றி ஓம்
ஓம் தன் கண்களை இமைத்து மூடுவதால் புவனங்களை ஆக்கி அழிப்பவளே போற்றி
ஓம் ஆதியில் ஐந்தெழுத்தின் வாலை தாயே போற்றி ஓம்
ஓம் அந்தரி, சுந்தரி, வாலை தாயே போற்றி ஓம்
ஓம் ஆதியந்த வாலையவள் இருந்த வீடே போற்றி ஓம்
ஓம் இம்மை மறுமையை நீக்கும் வாலை தாயே போற்றி ஓம்
ஓம் ஈடில்லா ஞானமதை அளிக்கும் வாலை தாயே போற்றி ஓம்
ஓம் இராச பாண்டி பெண்ணாம் வாலை தாயே போற்றி ஓம்
ஓம் உகமுடிந்த ஐந்தெழுத்தான வாலை தாயே போற்றி ஓம்
ஓம் உற்பனமான ஐந்தெழுத்தான வாலை தாயே போற்றி ஓம்
ஓம் ஊமை எழுத்தே உடலான வாலை தாயே போற்றி ஓம்
ஓம் எங்கும் நிறைந்த வாலை தாயே போற்றி ஓம்
ஓம் எல்லா கலைகளையும் அறிந்த குரு வாலை தாயே போற்றி ஓம்
ஓம் ஏற்றம் அளிக்கும் ஞான வாலை தாயே போற்றி ஓம்
ஓம் ஐந்தெழுத்தும் என்றும் பேரான வாலை தாயே போற்றி ஓம்
ஓம் ஒளிவுதனில் ஒளிவு உறுதி தரும் வாலை தாயே போற்றி ஓம்
ஓம் ஓசை மணி பூரமதிலு திக்கும் வாலை தாயே போற்றி ஓம்
ஓம் ஓம் என்ற எழுத்தே உயிரான வாலை தாயே போற்றி ஓம்
ஓம் ஔவைக்கும் கவிநாத மீந்த வாலை தாயே போற்றி ஓம்
ஓம் அஃறிணைக்குள்ளும் நாத வடிவ வாலை தாயே போற்றி ஓம்
ஓம் தெளிவு தனில் தெளிவுதரும் வாலை தாயே போற்றி ஓம்
ஓம் சிவமயமும் காட்டுவிக்கும் வாலை தாயே போற்றி ஓம்
ஓம் நல்லவழி ஞானங் கூட்டும் வாலை தாயே போற்றி ஓம்
ஓம் மகத்தான வேதாந்த சித்திதரும் வாலை தாயே போற்றி ஓம்
ஓம் உற்பனத்தில் உற்பனமாய் உறுதிதரும்  வாலை தாயே போற்றி ஓம்
ஓம் வெளியதனில் வெளியாகி நாதரூப வாலை தாயே போற்றி ஓம்
ஓம் விளங்கிநின்ற வாலையாம் வாலை தாயே போற்றி ஓம்
ஓம் ஆதியந்தம் வாலையவளிருந்த வீடே போற்றி ஓம்
ஓம் சோதியந்த நடுவீடு பீடத்தமர்ந்தாய் வாலை தாயே போற்றி ஓம்
ஓம் பாதிமதி சூடியதோர் வாலை தாயே போற்றி ஓம்
ஓம் பத்துவயதுமான வாலை தாயே போற்றி ஓம்
ஓம் காமி வெகு சாமி சிவகாமி ரூபி தாயே தாயே போற்றி ஓம்
ஓம் கற்புடைய பெண்ணரசி வாலை தாயே போற்றி ஓம்
ஓம் தேனென்ற மொழிச்சி தாயே போற்றி ஓம்
ஓம் தேகமதில் அமிர்தமூட்டும் தாயே போற்றி ஓம்
ஓம் ஊனென்ற உடலுக்குள் நடுவான தாயே போற்றி ஓம்
ஓம் உத்தமியாள் பத்து வயதான தாயே போற்றி ஓம்
ஓம் பஞ்சவண்ணமாகி நின்ற பிராபரை தாயே போற்றி ஓம்
ஓம் அண்டரோடு முனிவர்களும் போற்றும் தாயே போற்றி ஓம்
ஓம் சூட்சமிவள் வாசமது நிலைத்த வீடே போற்றி ஓம்
ஓம் சொல்லுதற்கே எங்குமாய் நிறைந்த வீடே போற்றி ஓம்

ஓம் தேசமதில் போய் விளங்கு மிந்த வீடே போற்றி ஓம்
ஓம் சித்தாந்த சித்தரவர் தேடும் வீடே போற்றி ஓம்
ஓம் ஓசைமணிப் பூரமதில் உதிக்கும் வீடே போற்றி ஓம்
ஓம் ஓகோகோ அதிசயங்களுள்ள வீடே போற்றி ஓம்
ஓம் ஆசுகவி மதுரமது பொழியிம் வீடே  போற்றி ஓம்
ஓம் அவனருளும் கூடி விளையாடும் வீடே போற்றி ஓம்
ஓம் வீடுமது தலைவாசல் அதுமேல் வாசல் திறக்க வேணும் தாயே ஓம்
ஓம் சித்தர்கள் போற்றும் தாயே போற்றி ஓம்
ஓம் வாயு மனமுங் கடந்த மனோன்மணி தாயே போற்றி ஓம்
ஓம் பேயுங் கணமும் பெரிதுடைப் பிள்ளை போற்றி ஓம்


ஓம் ஆயும் அறிவும் கடந்த அரனுக்கு தாயும் மகளும் தாரமுமானாய் போற்றி ஓம்
ஓம் சக்தி என்ற ஒரு சாதக பெண்பிள்ளையே போற்றி ஓம்
ஓம் முக்தி அளிக்கும் நாயகியே போற்றி ஓம்
ஓம் ஓங்காரி என்னும் பெண்பிள்ளையே போற்றி ஓம்
ஓம் நீங்காத பச்சை நிறம் உடையவளே போற்றி ஓம்
ஓம் ஆங்காரியாகிய ஐவரை பெற்றவளே போற்றி ஓம்
ஓம் ரீங்காரத்துள் இனித்திருந்த வாலையே போற்றி ஓம்
ஓம் உற்பனமான ஐந்தெழுத்தான வாலையே போற்றி ஓம்
ஓம் முச்சுடரான விளக்கான வாலையே போற்றி ஓம்
ஓம் தாய்வீடு கண்ட வாலையே போற்றி ஓம்
ஓம் சிரித்து மெல்ல புரமெரித்த வாலையே போற்றி ஓம்
ஓம் ஒருத்தியாக சுடர்தமை வென்ற வாலையே போற்றி ஓம்
ஓம் கொடுஞ்சூலி திரிசூலி வாலையே போற்றி ஓம்
ஓம் ஆயுசு கொடுக்கும் வாலையே போற்றி ஓம்
ஓம் நீரழிவு போக்கும் வாலையே போற்றி ஓம்
ஓம் சத்தி சடாதரி வாலையே போற்றி ஓம்
ஓம் மாலின் தங்கையே வாலையே போற்றி ஓம்
ஓம் சோதிப்பெண்ணாம் வாலையே போற்றி ஓம்
ஓம் ஆண்டிப்பெண்ணாம் வாலையே போற்றி ஓம்
ஓம் இராச பாண்டி பெண்ணாம் வாலையே போற்றி ஓம்
ஓம் அந்தரி சுந்தரி வாலையே போற்றி ஓம்
ஓம் வல்லவள் அம்பிகை வாலையே போற்றி ஓம்
ஓம் தொல்லை வினை போக்கும் வாலையே போற்றி ஓம்
ஓம் அரிக்கு முந்தின தவ்வெழுத்தாம் வாலையே போற்றி ஓம்
ஓம் அரிக்குள் நின்ற ஐந்தெழுத்தாம் வாலையே போற்றி ஓம்
ஓம் ஆதியில் ஐந்தெழுத்தான வாலையே போற்றி ஓம்
ஓம் நாதியில் ஊமை எழுத்தான வாலையே போற்றி ஓம்
ஓம் ஊமை எழுத்தே உடலான வாலையே போற்றி ஓம்
ஓம் ஓம் என்ற எழுத்தே உயிரான வாலையே போற்றி ஓம்
ஓம் செகம் படைத்த ஐந்தெழுத்தான வாலையே போற்றி ஓம்
ஓம் சீவன் படைத்த ஐந்தெழுத்தான வாலையே போற்றி ஓம்
ஓம் உகமுடிந்த ஐந்தெழுத்தான வாலையே போற்றி ஓம்
ஓம் பங்கய வாசனப் பாலை கமலைப் பராசக்தியே போற்றி ஓம்
ஓம் மனதை அழித்து ஞானம் அளிக்கும் மனோண் மணியே போற்றி ஓம்
ஓம் நித்ய யௌவனா வாலை பருவ பராசக்தியே போற்றி ஓம்
ஓம் எனும் ஓங்காரத்துள்ளே ஒரு மொழி ஆன வாலை தாயே போற்றி ஓம்
ஓம் எனும் ஓங்காரத்துள்ளே ஒரு அழகு ஆன வாலை தாயே போற்றி ஓம்
ஓம் எனும் ஓங்காரத்துள்ளே பல பேதம் ஆன வாலை தாயே போற்றி ஓம்
ஓம் எனும் ஓங்காரமாக ஓண் முத்தி சுத்தியான வாலை தாயே போற்றி ஓம்
ஓம் செங்கதிராற்றிசை பத்தையும் செம்மை செய் செவ்வுருவமே வாலை தாயே போற்றி ஓம்
ஓம் அங்கை நான்கில் வரதாபய மணிபக்க வடம் துங்க நற்புத்தகம் தாங்கிய ணீன் செந்தாரணியே வாலை தாயே போற்றி ஓம்

மால் மூல மந்திரம்

ஓம் சங்கராய நமோ

ஷண்முகய நமோ

தேவி தேவி 

பஞ்சாச்சார ரூபி

வாலை ரூபி

பீஜாக்ஷர

சகல ஏவல் பில்லி சூனியங்கள்

மார் மார் நசி நசி சுவாஹா

ஓம் திரியட்சரிசடாட்சரிநவாட்சரி வாலை தாயே போற்றி போற்றி

 “ஓம் ஐம் க்லீம் சௌம்”

ஓம் ஐம் க்லீம் சௌம்

சௌம் க்லீம் ஐம்”

ஓம் ஐம் க்லீம் சௌம்

சௌம் க்லீம் ஐம்

ஐம் க்லீம் சௌம்”

ஓம், ஸ்ரீம், ஓம், ஓம்க்ரீம், சௌவும், திரிபுவனே சக்தி, மம சுவாகா

ஓம்  ஐம் க்லீம் சௌம் சௌம் க்லீம் ஐம் வாவா வாலை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி நமஹா”

அருண கிருண ஜாலா ரஞ்சிதா சாவகாசா

வித்ருத ஜப படீகா புஸ்தகா பீதி ஹஸ்தா

இதரகர வராட்யா புஹ்ல கஹ்லார ஸம்ஸ்தா

நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாண சீலா!!!”

“எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ஆன்ம நேய ஒருமைப்பாடு உலகெங்கும் ஓங்குக.”

வாலை மனோன்மணி, அன்னை லலிதா திரிபுரசுந்தரி, வாலாம்பிகை, பாலாம்பிகை,  வாலையம்மன், அசோக சுந்தரி, பாலா திரிபுரசுந்தரி, ஆதி சக்தி, கன்னியகுமரி பகவதி அன்னை, சிவசக்தி md;id guhrf;jp Mjpguhrf;jp

epd; ghjk; ruzk;.


எல்லா உயிர்களும்  இன்புற்றிருக்க ஈசனுடன் உறைந்j அன்னைNa ruzk;

அம்மா தாயே சரணம்

 நின் பாதம் சரணம்  சரணம்

Visits:465